முல்லைத்தீவு முள்ளியவளை துயிலுமில்லத்தை தகர்த்த இராணுவப் படையினர் அதில் சிறப்பு படைமுகாம் ஒன்றை அமைத்து நிரந்தரமாக நிலைகொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் கொழும்பு மற்றும் வவுனியாவில் இருந்து செல்லும் பயணிகள் முள்ளியவளை பிரதேசத்திற்குள் பிரவேசித்ததும் தமது தரிப்பிடத்தை பேருந்து நடத்துனருக்கு தெரிவிக்கையில் துயிலுமில்லத்தடி இரக்கம் என்று குறிப்பிடுகின்றனர்.
இதுபோலவே அருகில் இருக்கும் முள்ளியவளை மூன்றாம் வட்டாரச் சந்தியை மாலதி கட்டவுட் இரக்கம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஏனெனில் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவ்விடத்தில் 2லெப் மாலதியின் திருவுருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வீரமரணமடைந்த மாவீரர்களின் பெயர்களை பொதுமக்கள் இன்றுவரை உச்சரித்துக்கொண்டே இருக்கின்றனர்.
இதன்படி புதுக்குடியிருப்பு செந்தூரன் சிலையடி, தேராவில் துயிலுமில்லம், பசிலன்வீதி, தலைமைசெயலகம், வருவாய்ப்பகுதி, காவல்துரையடி, போன்ற பல்வேறு இடங்களை அவ்வாறே பொதுமக்கள் தற்பொழுதும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள். அவர்கள் தமிழ்மக்கள் மனங்களில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகின்ற உண்மையாகும்.