”பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில், இவன்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். வருகிற 28-ம் தேதி தொடங்கவிருக்கும் இந்தத் தொழில் முனைவோர் மாநாட்டுக்காக அமெரிக்க தொழில்முனைவோர் குழுவைத் தலைமையேற்று இந்தியா அழைத்துவருகிறார் இவான்கா ட்ரம்ப். இதற்காக ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு எனப் பல வகையிலும் தயாராகி வருகிறது.