யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ள நிலையில் இன்று காலை குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லத்தில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் தாமும் குறித்த பகுதியில் சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதோடு தமது கொடிகளை அங்கே கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏற்பாட்டுக்குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் வருவிக்கப்பட்டு மேலதிக இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.