சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த நபர்கள், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
புத்தளம் தில்லையடிப் பகுதியிலுள்ள திருமணமண்டபமொன்றில், இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாகவும், பொலிஸாரைக் கண்டதும் அவர் தப்பிச்சென்று விட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.