நடுவீட்டில் அமைக்கப்பட்ட நவீன குழி, கும்மென்ற இருட்டில் தோன்றிய பண மாளிகை.!

தோண்டத் தோண்ட சுரங்கம் போல் போய்க் கொண்டேயிருக்கிறது சசிகலா குடும்பத்தினர் மீது வருமான வரித் துறையினரின் ரெய்டு,

ஜாஸ் சினிமாஸ்ஸின் ஆபிஸ்,புகழேந்தி , டி.டி.வி தினகரன் , திவாகரன் போன்றோர்களின் இல்லத்திலும் கோடநாடு எஸ்டேட், மறைந்த மகாதேவன் வீட்டில்,

மேலும், தஞ்சை டாக்டர் வெங்கடேஷ் இல்லம் என 160 இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டு இருந்தனர்

1000 கோடி ரூபாய்க்கான முறைகேடு ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இதைக் கேட்டே மூச்சடைத்துப் போயிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

ஆனால், கிடைத்ததெல்லாம் அவர்களுடைய உண்மையான சொத்தில் நூற்றில் ஒரு சதவீதம் கூட இல்லை என்று அவர்களது கட்சி வட்டாரமே சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இது ஒன்றும் அவர்களுக்கு ஏதாவது பூதம், காத்துக் கொடுத்துச் சென்ற புதையல் அல்ல. எந்தெந்த துறைகளில், எந்தெந்த வழிகளில் எவ்வளவு கிடைக்குமோ, அவ்வளவையும், சிந்தாமல், சிதறாமல், வாரிக் குவித்திருக்கிறார்கள்.

சாதாரண நடுத்தர வர்க்கமாக இருந்த சசிகலாவின் குடும்பம், இன்று இந்த நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு, சொத்துக்களாகவும், பணமாகவும், தங்கக் கட்டிகளாகவும், வைக்க இடம் இல்லாமல், தெரிந்த, பழகிய வட்டாரங்களை எல்லாம் தங்கள் பினாமிகளாக்கி. ஓரு பெரிய நெட் ஒர்க்கையே உருவாக்கி இருக்கிறார்கள்.

இது குறித்து ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியது, வருமான வரித்துறை ரெய்டில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றும் . ஜெயா டி.வி.யை கைப்பற்ற இபிஎஸ் நடத்தும் கொடூர வேலைதான் இது..என்று அந்த நேரத்திலும் உண்மையான விசுவாசியாக பேசினார்

பார்ப்போம் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று..

இப்போது தெரிகிறதா ஆர்.கே நகர் பணப்பட்டுவாடாவிற்கு காரணம்..?

தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகும் செய்தி,

சசிகலா வீட்டில் 17000 ஆயிரம் கோடி புதைக்கபட்டுருந்ததாகவும் சிபிஐ மூலம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது