தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம் சாவகச்சேரி நகர மத்திய பேரூந்து நிலையத்தில் அனுஷ்டிப்பதற்கான பூரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால் இந்த வருடத்துக்கான மாவீரர் தினம் சாவகச்சேரி நகர மத்தியில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5.30 க்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
இந்த மாவீரர் தின நிகழ்வில் தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரம் உணர்வுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.