பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடவும் மாவீரர் நாளை நடத்தவும் அரசு அனுமதி வழங்க காரணம்?

மாவீரர் நாளை தற்போது அரசியல் கட்சிகள் நடத்துவதற்கு காரணம் அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தவே என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் கிளிநொச்சி தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்துவதற்கே போட்டி போட்டுக்கொண்டு மாவீரர் நாளை நடத்துகின்றனர்.

தங்களுடைய பிள்ளைகளை நாட்டுக்காக கொடுத்த பல தாய்மார்கள் விளக்கேற்றமுடியாத நிலையில், ஓலைக் குடிசைகளில் ஓருவேளை உணவுக்காக கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மாவீரனை பெற்ற தாயை கவனிக்காது மாவீரர் நாளை நடத்துகின்றனர்.

2009க்கு முன் எவ்வாறு மாவீரர் நாள் நடத்தப்பட்டதோ எந்தளவுக்கு புனிதத்தன்மையோடு அனுஸ்டிக்கப்பட்டதோ அந்த நிலைமை தற்போது இல்லை.

தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை நடத்துவதற்கோ நல்லாட்சி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றால் அது இங்கு நல்லாட்சி நடக்கிறது என்பதனை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கே எனவும் தெரிவித்தார்

mavirar-736x400