முகத்தை அசிங்கப்படுத்தும் முகப்பருக்கள் வர முக்கியமான காரணம் சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை தடுத்தால் முகப்பருக்களை தடுக்கலாம். தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.
ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும். இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடிக்கலாம், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளலாம். செயற்கை சுவையூட்டிகளை தவிர்ப்பது நல்லது. மேலும், மாசு அடையாமல் பார்த்துக்கொள்வது நல்லது.