மாவீரர் சுவரொட்டியை பொலிஸார் பறித்து சென்றதால் வல்வெட்டித்துறையில் பதற்றம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி களையும், மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் வல்வெட்டித்துறை பொலிஸார் பறித்து சென்றுள்ளனர்.

இதே போன்று பருத்தித்துறையில் மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

eelamalar-1இதனால் அப்பகுதியில் நேற்று இரவு முழுவதும் பதற்றம் நிலவி யிருந்தது, தலைவர் பிரபாகரனுக்கு இன்றையதினம் அறுபத்தி மூன்றாவது பிறந்த தினமாகும்.

அதனையொட்டி நேற்றையதினம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீ ரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறும் அழை ப்பு விடுத்து துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வந்தன.

இந்த சுவரொட்டி ஒட்டும் பணிகள் நேற்று இரவு நடைபெற்று கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு திடீரென வந்த பொலி ஸார் துண்டு பிரசுரங்களை பறித்து சென்று ள்ளனர்.

இதேபோன்று தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஒலிவாங்கிகள் மூலம் பருத்தித்துறை பகுதியில் அறிவித்து கொண்டிருக்கும் போது சக்கோட்டையில் வைத்து ஆட்டோவை வழிமறித்த பொலிஸார், ஆட்டோவையும் சாரதியையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் இரு பொலிஸ் நிலையங்களையும் முற்றுகையிட்டு பொலிஸார் அராஜகம் செய்வதாக கூடி நின்றார்கள். பின்னர் பொலிஸார் சாரதியை விடுவித்துள்ளனர்.

எனினும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதென்றால் தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும், தம்மிடம் அனுமதி பெற்றே மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முடி யும் எனவும் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களுக்கு கூறியுள்ளனர்.

மேலும் துண்டு பிரசுரங்களை நேற்று இரவு வரை பொலிஸார் கொடுக்கவில்லை.

எனினும் பொலிஸாரின் அச்சுறுத்தலை கவனத்தில் எடுக்காத இளைஞர்கள் நேற்று இரவு முழுவதும் தீருவிலில் மாவீரர் தின த்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திட்டமிட்டது போன்று மாவீரர் தினம் நாளை அனைத்து இடங்களிலும் நடைபெறும் எனவும் இவ்வாறான அச்சுறுத்தல்களை கண்டு பொதுமக்கள் பயம் கொள்ள தேவையில்லை எனவும், அரசாங்கம் ஒருபோதும் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காது எனவும் மாவீரர் தின நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சூழலில் பதற்றம்: இராணுவத்தினர் குவிப்பு! (Video)

01 (2)  பிரபாகரன், மாவீரர் சுவரொட்டியை பொலிஸார் பறித்து சென்றதால் வல்வெட்டித்துறையில் பதற்றம்! 01 23

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ள நிலையில் இன்று காலை குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

01 (1)  பிரபாகரன், மாவீரர் சுவரொட்டியை பொலிஸார் பறித்து சென்றதால் வல்வெட்டித்துறையில் பதற்றம்! 01 12இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லத்தில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் தாமும் குறித்த பகுதியில் சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதோடு தமது கொடிகளை அங்கே கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏற்பாட்டுக்குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில், குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் வருவிக்கப்பட்டு மேலதிக இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

01 (3)  பிரபாகரன், மாவீரர் சுவரொட்டியை பொலிஸார் பறித்து சென்றதால் வல்வெட்டித்துறையில் பதற்றம்! 01 3201 (4)  பிரபாகரன், மாவீரர் சுவரொட்டியை பொலிஸார் பறித்து சென்றதால் வல்வெட்டித்துறையில் பதற்றம்! 01 4201 (5)  பிரபாகரன், மாவீரர் சுவரொட்டியை பொலிஸார் பறித்து சென்றதால் வல்வெட்டித்துறையில் பதற்றம்! 01 52