சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசுமுறைப் பயணமாக இன்று தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தென்கொரிய அதிபரின் அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன சியோலுக்குப் பயணமாகவுள்ளார்.
சிறிலங்கா அதிபரை எதிர்வரும் 29ஆம் நாள் தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பொருளாதார ஒத்துழைப்பு, பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம், கலாசார ஒத்துழைப்பு, உடன்பாடுகளும், முதலீட்டு ஒத்துழைப்பு, பணியாளர் அனுமதி முறை தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.
எதிர்வரும் 30ஆம் நாள் தென்கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா அதிபர் நாடு திரும்பவுள்ளார்.