யாழில் மனைவியின் தோட்டால் கணவன் தற்கொலை

சாராயம் குடிப்பதற்காக மனைவியின் காதிலிருந்த தோட்டைக் கேட்டுள்ளார் கணவன். மனைவி அதைக் கொடுக்க மறுத்து கடுமையாக கணவனை ஏசிவிட்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பின்னர் அன்று நண்பகல் வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவன் துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளான். இச் சம்பவம் காரைநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான திருநாவுக்கரசு பார்த்தீபன் என்ற 31 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி பிரேம்குமார் குறித்த இச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

cad1319b6dc98011b8157a766fb6986b--buy-jewellery-online-fashion-wear