அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொயின் அலி ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி வீரரான மொயின் அலியின் ஸ்டம்பிங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருந்த போது, மொயின் அலி மற்றும் பேர்ஸ் டோ சிறப்பாக ஆடி வந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக மொயின் அலி ஸ்டம்பிங் ஆனார், இது மூன்றாவது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்ட போது, மொயில் அலி அவுட் என்று அறிவிக்கப்பட்டு வெளியேறினார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் 3-வது நடுவரின் ஸ்டம்பிட் தீர்ப்பு குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது கிரீஸ் கோட்டின் அடர்த்தியையும், அது முதலில் நேராக இருந்ததா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கால் கிரிஸின் உள்ளே தான் சற்று இருந்தது என்று இங்கிலாந்து ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி அது அவுட் மட்டும் இல்லை என்றால், இங்கிலாந்து அணி, தற்போது தோற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காது என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் மொயின் அலியோ இதை பெருந்தன்மையாக அணுகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை கிரீஸ், கால் அதில் பதிந்த இடம் ஆகியவற்றை ஒருவர் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறார் என்பதைப் பொறுத்ததாகும். நடுவர் தீர்ப்பை மதிக்க வேண்டும். பிறகு அடுத்தகட்டம் நோக்கி நகர வேண்டும் என கூறியுள்ளார்.