இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின்(ஐசிஏஆர்) நிறுவனங்களாக தமிழ்நாட்டில் இயங்கிவரும் மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகம் ,சென்னை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம்,
கோயம்புத்தூர் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி ஆகியவற்றை வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் மறுசீரமைப்புக்காக உயர்மட்டக்குழு அமைத்து அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகம் (இந்தியா),சென்னையில் அமைந்துள்ள ஒரே இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஆகும். தமிழகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு கோவை மற்றும் திருச்சியில் உள்ள இந்திய வேளாண்ஆராய்ச்சிக் குழுமத்தின் மற்ற இரு நிறுவனங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகமானது தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் மற்ற கடலோர மாநிலங்களுக்கும் தொழில்நுட்ப உதவிகளை எப்போதும் அளித்து வருகிறது .
தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கடலோரக் குடும்பங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீன் வளர்ப்பை நம்பியுள்ளன. மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் 300ஊழியர்களும், 70 வேளாண் விஞ்ஞானிகளும் பணிபுரிந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பொதுவாக மீன்வளத் துறைக்கு உதவி வருவதோடு, ஏற்றுமதிகள் மூலம் தமிழகம் 1200 கோடி ரூபாய் அந்நிய செலாவணி பெறுவதற்கும் பேருதவியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனங்களை மற்ற நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவானது ஏற்றுக்கொள்ள முடியாததும், தமிழகத்தின் சென்னை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேசிய நிறுவனங்களை தமிழகம் இழக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது.
மேலும், இதுபோன்ற முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத மறுசீரமைப்பை மேற்கொள்வதால், பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவதோடு, மாநிலத்தில் அத்துறை சார்ந்த ஆராய்ச்சிமற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கும், மீன் வளர்ப்பு மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கும் பெரிதும் ஊறு விளைவிக்கும்.இவ்வாறு அந்த கடிதத்தில் மு.கஸ்டாலின் கூறியுள்ளார்.