பாலியல் உறவில் ஈடுபட்டவாறு வாகனம் செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வொஷிங்டன் மாநிலத்தின் டெகோமா நகரில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 23 வயதான மைக்கல் டோன்கின் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மைக்கல் டோன்கினும் டெய்ஸி ராரோக் (23) எனும் பெண்ணும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் இந்நிலையில் மேற்படி வாகனம் மரமொன்றில் மோதியதாகவும் வொஷிங்டன் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேற்படி இருவரும் காயமடைந்தனர். அவ்வேளையில் வாகனத்தின் பின் ஆசனத்தில் 3 மாத வயதான குழந்தையொன்றும் இருந்தது. அக்குழந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து இடம்பெற்றவுடன் மேற்படி ஆணும் பெண்ணும் நிர்வாண கோலத்தில் வாகனத்திலிருந்து வெளிவருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொலிஸார் வருவதற்கிடையில் ஆடைகளை தேடிக் கண்டுபிடித்து அணிந்துகொள்ள இந்த ஜோடியினர் அவசரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை செலுத்திய மைக்கல் டோன்கின் மதுபோதையில் இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து மைக்கல் டோன்கின் வெளிவந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.