சிவில் உடையில் வந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்!

சிவில் உடையில் வந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்!

வவுனியா நகர்ப்பகுதியில் சிவில் உடையில் நிற்கும் பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மைக்காலமாக அதிகளவான கஞ்சா கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் சிவில் உடையில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேரூந்துக்காக காத்திருக்கும் பொது மக்களை சிவில் உடையில் சோதனையிடும் போது பொலிஸார் என அடையாளம் காணமுடியாமையால் மக்கள் முரண்பாட்டுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

இதன்போது தம்முடன் முரண்படுவோர் மீது சிவில் உடை தரித்த பொலிஸார் தாக்குவதுடன் அதிகளவானோர் பார்த்திருக்க பொலிஸ் நிலையத்திற்கும் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து செல்கின்றனர்.

எனவே இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.