மாவீரர் தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தில் முக்கிய தளபதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்கள் ஒரே நாளில் விதைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறை முற்றத்தின் மீது மலர்கள் தூவி, ஈகைச்சுடர் ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் தமது மரியாதையை செலுத்துகின்றனர்.