தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 19 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் சிலருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு சிலர் மக்களின் கோபத்திற்கு ஆளானார்கள். அந்த வகையில் கவிஞர் சினேகன் அவர்களுக்கு மக்களின் அன்பு கிடைத்து என்றே சொல்லவேண்டும். அன்பும் ஆதரவும் இல்லாமால் இவரால் அந்த போட்டியின் இறுதிவரை பயணித்திருக்க முடியாது இல்லையா.! இவர் பிக் பாஸ் போட்டியில் ஜெய்தால் ஒரு மிக பெரிய நூலகம் கட்டுவதாக கூறிருந்தார். இரண்டாம் இடத்திற்கு வந்ததற்கே நூலகம் கட்டும் பணியில் இறங்கிவிட்டார் சினேகன்.
மேலும், இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது அவரது தந்தை இந்த நிகழ்க்கட்சிக்கு வந்திருந்தார், அந்த தருணத்தை மறந்தவர்கள் யாரும் இல்லை. அப்போது அவரது தந்தை சினேகனிடம் கேட்டுக்கொண்டது இவரது திருமணத்தை பற்றி தான். அந்த வகையில் இவரது திருமணம் பற்றிய தகவலை இவர் ஜூன் மாதத்தில் அடுத்த ஆண்டு தெரிவிக்கவுள்ளாராம். தற்போது இவர் பொம்மிவீரன் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறாராம். பிக்பாஸ்க்கு முன்பே இப்படம் ஆரம்பிக்கப்பட்டு பின் பணப்பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டதாம். இந்த படத்தையும் அவர் 2018 ல் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.