டிரம்பின் மகள் இவாங்கா ஐதராபாத்திற்கு இன்று வருகை தர இதுவே காரணம்..!

டிரம்பின் மகள் இவாங்கா  ஐதராபாத்திற்கு இன்று வருகை தர இதுவே காரணம்..!

தெலுங்கானா தலைநகரான ஐதராபாத்தில் நான்கு முக்கிய துறைகளாகிய எரிசக்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு; நிதி தொழில்நுட்பம் மற்றும், ‘டிஜிட்டல்’ பொருளாதாரம்; டகம் மற்றும் பொழுதுபோக்கு; மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற விசயங்களை விவாதிப்பதற்காக சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று முதல் 3 நாட்கள் அங்கு நடக்க இருக்கிறது.

டிரம்பின் மகள் இவாங்கா  ஐதராபாத்திற்கு இன்று வருகை தர இதுவே காரணம்..!

பிரதமர் நரேந்திர மோடி துவங்கிவைக்க போகும் இந்த மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் அதிகமான தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர், டிரம்பின் மகளும், அவருடைய ஆலோசகருமான, இவாங்கா தலைமையிலான குழு இன்று அதிகாலை ஐதராபாத் வந்தது. அவருக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.