உலக அழகியாக மகுடம் சூடப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், `இப்போதைக்கு பாலிவுட்டைப் பற்றி நான் யோசிக்கவில்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் சான்யா சிட்டியில் நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார். அவர் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்பு உணர்வில் ஈடுபட உள்ளார்.