தங்கையை கர்ப்பமாக்கி கொலை செய்த கொடூரன்!

தமிழகத்தில் தங்கையையே அண்ணன் கர்ப்பமாக்கிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருச்சாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ரம். இவரது மகள் லட்சுமி கம்பை நல்லூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது முள்ளனூர் ஓடை கரையில் பள்ளி மாணவி ஒருவரின் உடல் கிடப்பதாக பொலிசருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார், மாணவியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரித்த போது தான் தெரியவந்தது, அவர் காணாமல் போன லட்சுமி என்று, இதையடுத்து பொலிசார் லட்சுமி இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் போது பொலிசாருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன, அதில், லட்சுமியின் பெற்றோர் வியாபராத்திற்காக அடிக்கடி பெங்களூருக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், அவரது பெரியப்பா மகனான பிரதாப், லட்சுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதை பயன்படுத்திக் கொண்ட பிரதாப், சிறுமி லட்சுமியை ஏமாற்றி, கர்ப்பமாக்கியுள்ளார்.

பின்னர் கர்ப்பத்தை கலைப்பதற்காக பிரதாப் அழைத்தபோது, அதை ஏற்க லட்சிமி மறுத்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரத்தில் லட்சுமியை அடித்து கொலை செய்த பிரதாப், உடலை முள்ளனூர் ஓடை கரையில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இவ்வளவு பெரிய காரியத்தை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல பிரதாப், உறவினர்களுடன் சேர்ந்து காணமல் போன லட்சுமியை தேடுவது போல நாடகமாடியுள்ளார். அப்போது மது குடித்துவிட்டு, நடந்த சம்பவத்தை பிரதாப் தனது நண்பர்களிடம் உளறியுள்ளான்.

இதை வைத்து பொலிசார் பிரதாப்பை கைது செய்து விசாரித்தபோது தான், இந்த கொலைக்கான முழு பின்னணியும் தெரியவந்துள்ளது.