சமீபத்தில் புகைப்படக்கலைஞர்களால் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளான ஐஸ்வர்யாக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார்.இறந்துபோன தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு தனது தாய் பிருந்தா மற்றும் மகள் ஆரத்யாவுடன் மருத்துவமனையில் நடைபெற்ற தொண்டு நிகழ்வில் கலந்துகொண்டார்.
இங்கு இவர் 100 வாய் தொடர்பான குறைபாடுகளுடன் பிறந்த 100 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பணஉதவி செய்துள்ளார்.இதன்போது, புகைப்படக்கலைஞர்கள் அதிகமாக புகைப்படம் எடுத்து தள்ளியுள்ளனர், இது மருத்துவமனை தற்போது நிறுத்துங்கள் என ஐஸ்வர்யா ராய் கூறியும், புகைப்படக்கலைஞர்கள் கூறியும் அவர் கேட்கவில்லை.
இதனால், உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத ஐஸ்வர்யா கண்ணீர் சிந்தியுள்ளார். இந்நிலையில், இவருடன் இருந்த ஆரத்யாவும் பாதிக்கப்பட்டுள்ளார். சிறு வயதான ஆரத்யா இந்த வயதிலேயே புகைப்படக்கலைஞர்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வயதிலேயே தனது தாயுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக புகைப்படம் எடுக்கப்படுகிறார். இதனால் பொது இடங்களில் செல்லும்போது ஆரத்யாவை அழைத்துசெல்வதை சற்று தவிர்க்க வேண்டும் என பச்சன் குடும்பத்தால் கேட்டுக்கொண்டுள்ளது.
அது மட்டுமன்றி, புகைப்படக்கலைஞர்களும் ஆரத்யாவை விட்டு சற்று தள்ளியே இருக்க வேண்டும் என பச்சன் குடும்பத்தாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.