ஓபிஎஸ்-எடப்பாடி தலைமையிலான ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கு காரணம் ஓபிஎஸ்தான் என்று அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஓட்டினார்கள்.
இதனால், கடுப்பான எடப்பாடி ஆதரவாளர்கள் ‘இலையை மீட்டு வந்த எடப்பாடி’ என்று போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
ஓபிஎஸ்-யை பொறுத்தவரை, ‘நாம அவங்களோடு சேராமல் இருந்திருந்தால் எப்படி இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்கும்?.
சின்னம் கிடைக்க நாமதானே காரணம். அவர்கள் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
RK நகர் தேர்தலில் நம்முடைய வேட்பாளராக களமிறங்கிய மதுசூதனனுக்குத்தான் இந்த முறை சீட் கொடுக்கணும்.
ஆட்சி மன்றக் குழு கூட்டம் கூட்டினாலும், அங்கே எல்லோரும் மதுசூதனன் பெயரையே சொல்லுங்க என்று கூறியிருக்கிறார்.
இந்த விசயம் எடப்பாடி கவனத்துக்கு வந்ததும்தான், அவர் உடனே அமைச்சர்கள் ஜெயகுமாரையும், வேலுமணியையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.
இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்ததற்கு காரணம் அவர்கள்தான் என்று சொல்லிட்டு இருக்காங்க.
அதனோடு மட்டும் இல்லாமல், மதுசூதனனை RK நகர் தொகுதியில் நிறுத்தி ஆகணும்னு பேசியிருக்காங்க.
அதை எப்படி நாம் அனுமதிக்க முடியும்? ஆட்சி மன்ற கூட்டத்தில் அவர்கள் எதாவது பேசினால், என்னால் நேரடியாக பதில் சொல்ல முடியாது.
நீங்கள்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி கூறியிருக்கிறார். அதனால்தான், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விசயம் ஓபிஎஸ்க்கு தெரிந்ததும் அவர் டென்ஷன் ஆகிவிட்டாராம். பிள்ளையையும் கிள்ளி விட்டு.., தொட்டிலையும் எடப்பாடி ஆட்டுகிறாரா..? என்று தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் கொந்தளித்துள்ளாராம்.
வேட்பாளரை முடிவு செய்யும் போது, இரண்டு தரப்பிற்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.