ஓட்டமாவடி புகையிரத கடவையினூடாக சைக்கிளில் பயணித்த தம்பதிகள் விபத்திற்குள்ளான நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(27) பிற்பகல் சம்பவித்துள்ளது.
சைக்கிளில் மனைவியை ஏற்றியவாறு தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை தண்டவாளம் சறுக்கியதால் மனைவி தரையில் விழுந்த சமயம் பின்னால் வந்த படிரக வாகனமொன்று தலையில் ஏறியது.
இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த பெண்மணி மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் மாஞ்சோலையை சேர்ந்த 40 வயதுடைய றழீனா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.