இது ஒரு உண்மைச் சம்பவம்: கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர். தனது அப்பா அம்மாவை சுற்றுலா விசாவில் கனடாவுக்கு அழைத்துள்ளார். அவர்களும் விசா கிடைத்த சந்தோஷத்தில், தனது மகனுக்கு பல பொருட்களை வாங்கிக்கொண்டு கனடா வந்துள்ளார்கள். அன்று இரவு நீண்ட நேரம் பெற்றோரோடு பேசிவிட்டு படுக்கச் சென்ற அந்த இளைஞன் காலையில் எழும்பவே இல்லை.
தாயார் சென்று பார்த்தவேளை அவர் வாயில் நுரையோடு இறந்து கிடந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் பதறிய தாயார், அருகில் உள்ள வீட்டுக்காரரை அழைத்து உதவி கோரினார். விரைந்து வந்த பொலிசார் அவரை அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலை எடுத்துச் செல்ல. அங்கே தான் அவருக்கு ஏதோ ஒரு விஷப் பூச்சி கடித்துள்ளது என்ற விடையம் தெரியவந்துள்ளது.
மீண்டும் வீட்டை நோக்கி பெருமளவான பொலிசார் விரைந்து சென்றார்கள். வீட்டை சல்லடை போட்டு தேடினார்கள். அங்கே அந்த இளைஞன் படுத்திருந்த ரூமில் கட்டிலுக்கு அடியே சிறிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து திகைத்துப்போனார்கள். யாழில் இருந்து அப்பா அம்மா வெளிக்கிடும்போதே. அந்த பாம்பு அவர்கள் கனடாவுக்கு கொண்டு செல்ல இருந்த சூட் கேசுக்குள் சென்றுவிட்டது. எல்லா வகையான ஏர்போட் ஸ்கேனிங்கிலும் அது சிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க.
மகனுக்கு சாமான்கள் வாங்கி வந்த சூட்கேஸை அப்பா அம்மா அவரிடம் கொடுத்துள்ளார்கள். அவர் அதனை திறந்து பார்தவேளை பாம்பு தீண்டியதா ? இல்லை அவர் தூங்கச் சென்ற பின்னர் அது தீண்டியதா என்பது தெரியவில்லை. கட்டிலுக்கு அருகே தான் அந்த சூட்கேசும் இருந்துள்ளது. என்ன கொடுமை ? … இதனை தான் காலம் என்பார்கள்.. காலன்(எமன்) அப்பா அம்மாவோடு , யாழில் இருந்து வந்துள்ளான்….