உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத காரணத்தினால் பல ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்ட மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் 28 வயததன பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவரது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகிறார். மேலும் தாம்பத்திய உறவில் மனைவியை திருப்திபடுத்த முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவரது நிலை குறித்து விசாரிக்க நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதில் அந்தப் பெண்ணுடன் நண்பருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவன், குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளக்காதலனின் உதவியுடன் அவரது நண்பர்கள் சிலரும் இளம் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களையும் தனது வலையில் வீழ்த்திய அந்தப் பெண் அவர்களுடனும் உல்லாசமாக இருக்க ஆரம்பித்துள்ளார்.
தனது வாழ்க்கைக்கு கணவர், குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இந்த நிலையில் அவரது குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்க புதிய திட்டமொன்றை தீட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சிறு காய்ச்சல்தான். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என கூறி மருந்து கொடுத்துள்ளனர்.
ஆனால், அந்தப் பெண்ணோ குழந்தையின் நலன்தான் எனக்கு முக்கியம். எனவே இங்கேயே தங்கி சிகிச்சை பெறுகிறோம். உடல் நிலை பூரண குணமடைந்த பிறகு செல்கிறோம் என்றார். டாக்டர்கள் எடுத்துக் கூறியும் அந்த இளம் பெண் கேட்கவில்லை.
இறுதியாக அடம்பிடித்து தனி அறை ஒன்றை வாங்கி கொண்டார். பின்னர் கள்ளக்காதலர்களை ஒருவர் பின் ஒருவராக தொலைபேயின் மூலம் மருத்துவமனை அறைக்கு அழைத்து அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு உல்லாசமாக இருக்க ஆரம்பித்துள்ளார்.
குழந்தையை பார்க்க உறவினர்கள் வந்து செல்கின்றார்கள் என்று மருத்துவமனை ஊழியர்களும் கண்டு கொள்ளவில்லை.
இது ஒருபுறமிருக்க குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நன்கு தேறியுள்ளது. இதையடுத்து வீட்டுக்கு செல்லுமாறு பெண்ணிடம் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால், அப்பெண் அதை ஏற்க மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பெண்ணின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
அப்போது, பெண்ணை பார்க்க ஆண்கள் வந்தவுடன் அறைக்கதவு மூடிவிடுகிறது. பிறகு வெகுநேரம் கழித்தே கதவு திறக்கிறது. இதனால் உள்ளே என்ன நடக்கிறது? என்பதை மருத்துவமனை ஊழியர்கள் உணர்ந்து கொண்டனர்.
இது குறித்து உடனடியாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் உடனடி விசாரணையில் இறங்கியுள்ளனர். மருத்துவமனைக்கு வந்து சென்ற ஆண்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் மருத்துவமனை அறையை சொகுசு அறையாக மாற்ற முயன்றதும், பல ஆண்களை அழைத்து பெண் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்து எச்சரித்துள்ளதுடன், குறித்த மருத்துவமனை அறையிலிருந்து உடனே கிளம்பி செல்லுமாறும் தெரிவித் துள்ளனர்.