உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியின் குவான் ஹீடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகி, இவருக்கும் டேராடூனை சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம்மானது.இவர்களது திருமணம் குவான் ஹீடியில் கடந்த 22 ந்தேதி நடைபெற்றது. குவான் ஹீடி உத்தரபிரதேசம் அருகே உள்ளது.
மணமகளுக்கு மணமகன் வீட்டு சார்பாக தங்க வெள்ளி நகைகள் அணிவித்து உள்ளனர். நேற்று காலை வரை எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது.
மணமகள் கயா தனக்கு உடல் நலம் சரி இல்லை என்று கூறி உள்ளார். உடனடியாக அவரை கணவர் தியாகி மருத்துவமனை அழைத்து சென்று உள்ளார்.
அங்கு டாக்டர் மணமகளை பரிசோதித்து விட்டு மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்து உள்ளார். பின்னர் கணவனும் மனைவியும் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
வரும் வழியில் கயா எனக்கு கோழிக்கறி வேண்டும் என்று கேட்டு உள்ளார். அருகே அசைவ உணவகங்கள் எதுவும் இல்லாததால் உத்தரபிரதேசம் எல்லை அருகே உள்ள புர்காசி என்ற நகருக்கு சென்று உள்ளனர்.
அங்கு போனதும் புதுப்பெண் கயா குளீர்பானம் வேண்டும் என கேட்டு உள்ளார். கணவர் சென்று வாங்கி கொண்டு வந்து பார்த்த போது புதுமனைவி கயாவை அங்கு காணவில்லை. தியாகியும் சுமார் 4 மணி நேரமாக அங்கும் இங்கும் அலைந்து தேடி உள்ளார் ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
பின்னர்தான் தெரிந்தது புதுப்பெண்ணுக்கு அவர்கள் போட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன் ஓடி போய்விட்டார் என்று. டாக்டரிடம் செல்ல வேண்டும் என்று கூறி நகைகளுடனேயே கயா புறப்பட்டு உள்ளார்.
இது குறித்து நர்சான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணாக நடித்து நகை திருடி சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.
திருமணத்தை ஏற்பாடு செய்த ஒரு இடைத்தரகர் மீது போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர். இது வழக்கமான ஒரு கும்பலின் செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.