எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு வெகுவிரைவில் முடிவுகட்டப்படும்!

எமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிற்பிற்கு
இடமளிக்கப்போவதில்லை.
இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் தமிழரின் வரலாற்று மண்ணில் சிங்களத்தின் இறையாண்மையைத் திணித்துவிட முடியாது. தமிழரின் விடுதலைப் படை என்ற ரீதியில் நாம் எமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு
இடமளிக்கப்போவதில்லை.

e-malar-13எல்லைப் படையாக அணிதிரண்ட எமது மக்கள் இந்தச் சமர்களில் நேரடியாகப் பங்கு கொண்டு போராடியது எமது விடுதலைப் போராட்டத்திற்கு புதிய தெம்பையும், பலத்தையும் அளித்தது. குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும் இவர்கள் தேசப்பற்றால் ஈர்க்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி எடுத்து, பெரும் நிலா மீட்புச் சமர்களில் பங்குகொள்வது எமது தேசத்திற்கு பெருமை சேர்க்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பரந்துபட்ட பொதுமக்கள் இணைந்து கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டம் என்ற உயர்நிலை அரசியற் பரிமாணம் பெறுகிறது. எமது ஆயுதப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு மேலும் மேலும் பெருக வேண்டும். அதுதான் எமது போராட்டத்தில் பாரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும். அதுதான் எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு முடிவுகட்டி எமது விடுதலை இலட்சியத்தை வெகுவிரைவில் நிறைவு பெறச்செய்யும்.

– தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

(2000ம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலிருந்து…..)