திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி சோமனுத்து கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமுகத்தை சார்ந்த பிரியா என்கிற தலித் இளம்பெண் கடத்திக்கொண்டுபோய் மிககொடுரமான முறையில் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட செய்தி காவல்துறையின் மெத்தன போக்கினால் நான்கு நாட்களுக்கு பின் இன்றே வெளிவந்துள்ளது.
கொலைக்கான காரணம் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் பிரியா பாலியல் உறவுக்கு சம்மதிக்க மறுக்க வன்புணர்வு முயர்ச்சியில் அடித்துக்கொலை செய்யப்பட்டாள் என்று தகவல் வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் மோசம் அடைந்த உள்ளது அதிலும் குறிப்பாக பட்டியல் சமுகமான தலித் சமுதாயத்தை சார்ந்த பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
படுகொலைக்கு உட்படுத்திய கொலை குற்றவாளிகள் விரைவில் தண்டனையில் இருந்து தப்பாதவாறு கைது செய்ப்படவேண்டும்.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டமும் தலித் பாதுகாப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட தங்கை பிரியாவிற்ககு ஆழ்ந்த இறந்தலை மனவருத்தம் உடன் தெரிவிக்கிறேன்.