பெண்கள் ஆண்களை கற்பழிக்கும் விசித்திர கலாச்சாரம்!! எந்த நாட்டில் தெரியுமா..?

நாம் வாழும் இந்த உலகத்தில் பல விதமான, மதம்,கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றுகிறார்கள். சில நடைமுறைகள் வழக்கமானதாக இருக்கும். ஆனால் சில மிகவும் விசித்திரமானதாக இருக்கும்.

நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத சில விஷயங்கள் கலாச்சாரம் என்ற பெயரிலும், கடவுளின் பெயராலும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி உங்களை உறையவைக்கும் சில விசித்திரமான கலாச்சார நடைமுறைகளை இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க….

ஆண்கள் கற்பழிப்பு :

ஜிம்பாபே நாட்டில் இருக்கும் விசித்திரமான நடைமுறை இது. ‘ஜூஜூ’ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையின் படி, பெண்கள் ஆண்களை கற்பழிக்க வேண்டும்.

அதோடு அவர்களை விந்தணுக்களை திருடிக்கொண்ட தப்பித்திட வேண்டும்.

இப்படிச் செய்வதால் பெண்களின் ஆயுள் கூடுமாம். சமீபத்தில் பல ஆண்கள் இதற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள்.

பிணம் திண்ணிகள் :

பிரேசில் மற்றும் வெனின்சுலாவில் வசிக்கும் ‘யனோமமி’ என்ற பழங்குடி இன மக்களிடையே இந்த நடைமுறை இருக்கிறது. அவர்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால் எரித்துவிடுகிறார்கள்.

பின்னர் எரிந்த சாம்பலையும் எலும்புத்துண்டுகளையும் அவர்கள் குடிக்கும் சூப்பில் கலந்து குடித்துவிடுகிறார்கள்.

இதனால் இறந்து போன உறவு தம்மோடு எப்போதும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆண் தன்மை :

அமேசான் காட்டுப் பகுதியில் இருக்கும் ‘சட்டீரே மாவே’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் மிகவும் வலி மிகுந்த நடைமுறை இது.

அதன் படி, ஒரு வித கட்டெறும்புகள் நிறைந்த உள்ளாடையை ஆண்கள் அணிய வேண்டும்.

சதையை ஒரு தோட்டா துளைத்தால் எப்படி வலிக்குமோ, அப்படியான வலி உண்டாகும்.

ஒரு ஆண், இந்த நடைமுறையை செய்யவில்லை என்றால், அவன் ஆண் என்றே கருதப்பட்ட மாட்டானாம். அவர்கள் இனத்தில் ஆண்கள் கண்டிப்பாக இந்த நடைமுறையை பின்பற்றியாக வேண்டும்.

சீனக் கால்கள் :

சீனாவில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறை இது. இளம்பெண்களின் கால்களை 4 அல்லது ஐந்து வருடங்கள் கட்டி வைப்பார்கள். அவர்களின் பாதத்தின் அழகுக்காக இப்படிச் செய்கிறாரக்ள்.

கழிவறைக்கு செல்லத்தடை :

இந்தோனேஷியாவில் வசிக்கும் டிடோங் என்ற இனமக்கள் இதனை கடைபிடிக்கிறார்கள். அவர்களின் திருமண சடங்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

திருமணம் முடித்து மூன்று நாட்கள் அந்த ஆணும் பெண்ணும் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

இப்படிச் செய்வதால் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வார்கள் என்று நம்புகிறார்கள். மூன்று நாட்களுக்குப்பிறகு கழிவறையை பயன்படுத்தலாம்.