இந்தியாவில் அக்கா இறந்த நான்கு மணிநேரத்தில் தங்கைக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வீரேந்திர குமாருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 12 வருடத்திற்கு முன் மூத்த மகள் நீரஜாவை இராணுவத்தில் சிப்பாயாக உள்ள புஷ்பேந்திரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவரின் மூத்த மகளை புஷ்பேந்திரா கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தன்னுடைய இளைய மகளுக்கு நவம்பர் 23-ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்த வீரந்திரா, 18-ம் திகதி புது மாப்பிள்ளைக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளார்.
இத்தகவலை அறிந்த மூத்த மருமகன் புஷ்பேந்திரா அவரது மனைவியை உயிரோடு கொளுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் உடல் முழுதும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நீரஜா, தங்கையின் திருமணம் நிச்சயமாகியிருந்த அன்றைய தினம் மறைந்தார்.
இறுதிச்சடங்கு பணிகளில் இருந்த குடும்பத்தார், இளைய மகளின் திருமணம் நடக்குமா என்ற குழப்பத்தில் இருந்துள்ளனர்.
ஆனால் நிச்சயிக்கப்பட்ட திகதியில் எளிய முறையில் திருமணத்தை நடத்தி விடலாம் என மாப்பிள்ளை கூறியதையடுத்து குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தப்பியோடிய புஷ்பேந்திரா மீது கொலைவழக்கு பதிவு செய்து காவல்துறை தேடி வருகின்றது.