வடக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும், புலனாய்வு துறையின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். வடக்கில் சாதாரண மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளாக இதனை கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை வடக்கில் சில பகுதிகளில் கொண்டாடியதாகவும், மாவீரர் தனத்தை அனுஷ்டித்ததாகவும் ஊடகங்களின் மூலமாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இது குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டர்.