நடிகரும், நடிகர் சங்க தலைவருமான விஷால் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனா படம் சண்டகோழி. இந்த படம் விஷாலிற்கு வெற்றி படம் தான். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முத்த பாகத்தின் இயக்குனரே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் நிலையில். படத்தின் பாடல் வேலைகளும் ஒரு ஓரத்தில் நடந்து வருகிறது. முதல் பாகம் போல் இரண்டாம் பாகமும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று பல வகையில் சிந்த்தித்து வேலை செய்கிறார் யுவன். இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். நேற்று இதற்கான பாடல் கம்போசிங் நடந்துள்ளது.