வட கொரியா முன்னர் ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது.
தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென்கொரியா ஊடகங்கள் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்பு, வட கொரியாவின் இந்த ஏவுகணை 4,500 கிலோ மீற்றர் உயரத்தில், 960 கிலோ மீற்றருக்கு பறந்ததாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் தொடர் ஏவுகணைத் திட்டத்தின் சமீபத்திய ஒன்றான இந்த ஏவுகணையால், உலகளாவிய ரீதியில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு வட கொரியா பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏவப்பட்டுள்ள புதிய பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.