மதுசூதனனுக்கு சீட் இல்லைன்னா எனக்கு கொடுங்க…, திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ள அமைச்சர்.!!

எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் இணைந்து விட்டாலும், அவர்களுக்கு இடையே மூண்டுள்ள பனிப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஓபிஎஸ் ஆதரவு எம்பி மைத்ரேயன் தனது டிவிட்டர் பதிவில் இதனை அம்பலப்படுத்தியிருந்தார்.

அதன் பிறகு RK நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் இரண்டு அணிகளுக்கு இடையே மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.

மதுசூதனனை RK நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்க எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விருப்பமனுக்கள் அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அது ஒரு பக்கம் இருந்தாலும், மதுசூதனனுக்கு சீட் இல்லாவிட்டால், எனக்கு சீட் தாருங்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போர்க்கொடி தூக்கியுள்ளாராம்.

RK நகர் தொகுதியில் வன்னியர் சமூதாய ஓட்டுகள் இருப்பதால் தான் எளிதாக வெற்றி பெற்றுவிடுவேன் என்று கே.பி.முனுசாமி கூறுகிறாராம்.

அவருக்கு ஆதரவாக, மைத்ரேயன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகிறார்களாம்.

ஓபிஎஸ் அணி RK நகர் தொகுதியை விட்டு கொடுக்க தயாராக இல்லாததால், எடப்பாடி அதிர்ச்சி கடும் அடைந்துள்ளார்.

ஓபிஎஸ் அணியில் இருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், தனது அணியில் இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எடப்பாடி யோசித்து வருவதாக கூறப்படுகின்றது.

வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு, எடப்பாடி-ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.