சமீப காலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போரை எரிச்சலடைய வைத்திருக்கின்றன சுங்கச் சாவடிகள். இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் காத்திருக்காமல் போக ‘பாஸ்டேக்’ என்று ஒரு முறை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
இதற்காக யாரை எங்கு அணுகுவது என்பது தெரியவில்லை. அதனால்தான் இதுவரை வாகனத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொருத்தவில்லை’ என்கின்றனர் சில வாகன ஓட்டிகள்.
ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும், ‘பாஸ்டேக்’ வசதிக்கான ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில், வாகன பதிவுச் சான்றிதழ், பான் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்துக்கான பணம் செலுத்தி, ‘ஆர்.எஃப்.ஐ.டி’ எனப்படும், ‘ரேடியோ பிரிகுவென்சி ஐடென்டிபிகேஷன் ஸ்டிக்கர்’ பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளில் உள்ள சென்ஸார் மூலம் வாகனத்தின் பதிவை உறுதி செய்து, சுங்கச் சாவடியில் உள்ள பிரத்யேக வழியில் நிற்காமல் செல்லலாம்.
ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச் சாவடியை கடந்தவுடன், அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
ஸ்டிக்கர் இன்றி சென்றால் வழி கிடைக்காது. மையங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று, ஸ்டிக்கரை பெற்றால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கட்டணத்தை, ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகளின் இணையதள முகவரிக்கு சென்று, இணையதளம் மூலமாகவும், தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.
கட்டணம் தீர்ந்துவிட்டால், கார்டு முடக்கப்பட்டு, அந்த வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 364 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதால் 7.5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இனி, டோல்கேட்டில் சில்லறை பிரச்சினை இனி இல்லை.நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு.
என்வழி.. தனி வழி.. என்பது போல் டோல்கேட்டை கடக்கும்போது நீங்கள் ஒரு VIP போல உணர்வீர்கள்..
மேலும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் பணத்தை வைத்து கொண்டு பயத்துடன் செல்லும் கவலை இனி இல்லை..
பாஸ்டேக் கணக்கில் இங்கிருந்தே ரீசாரஜ் செய்யும் வசதி உள்ளதால் பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்.
சுங்க சாவடியில் மட்டுமல்லாது, உங்கள் அருகாமையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட CSC பொது சேவை மையங்களில் உங்கள் போட்டோ, ஆதார் அட்டை, RC Scan copy கொடுத்து இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.