அக்ஷய் குமார் இன்று பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிக்க வந்த போது பெரிதாக அக்ஷய் மீது எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லையாம்.
ஒரு நாள் பெங்களூரில் மாடலிங் ஷோ ஒன்றிற்கு அக்ஷய்க்கு அழைப்பு வந்ததாம், நல்ல சம்பளம் என்று கூறியதால் அவரும் வருவதாக கூறிவிட்டார்.
ஆனால், விமானம் காலை 6 மணிக்கு இருக்க, இவர் மாலை 6 மணி என்று நினைத்துக்கொண்டு விமானத்தை தவறவிட்டாராம், இதை தொடர்ந்து அவர் எவ்வளவோ கெஞ்சியும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை.
அதே நாள் யதார்த்தமாக அக்ஷய் குமார் நட்ராஜ் ஸ்டுடியோவிற்கு செல்ல இயக்குனர் ப்ரோமோத் நீ தான் என் அடுத்தப்படத்தின் ஹீரோ என 3 படங்களில் கமிட் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து அக்ஷய்க்கு இன்று வரை வெற்றி தான், உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகராகவும் வலம் வருகின்றார், நான் செய்த தவறு எனக்கு நன்மையாக அமைந்தது என அக்ஷய் குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.