மத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

P1060194குறிப்பாக மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இரு மாவட்டங்களிற்குமே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கண்டி மத- தும்பர பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ளதனால் மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை விழுகை , நிலவெட்டுசாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.