நாசிக் பஞ்சவட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ் குமார் சர்மா. இவரது மனைவி பிரியா.
இவர்களுடன் விகாஸ்குமாரின் தம்பி ஸ்ரீராம் குமார் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியே சென்ற விகாஸ்குமார் மீண்டும் நேற்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவர் வீட்டில் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது.
அவரது மனைவி படுக்கை அறையில் அசைவற்ற நிலையில் பிணமாக கிடந்தார். விகாஸ்குமாரின் தம்பி மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த விகாஸ்குமார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடனே தகவல் அறிந்து வந்த பொலிஸார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணும் மைத்துனரும் ஒரே அறையில் பிணமாக இருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.