கொழும்பு வந்த இரண்டு பயணிகள் விமானங்கள் அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டன!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்த இரண்டு பயணிகள் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து வருகைத்தந்த இரண்டு விமானங்களே மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

12-1499835222-airasia-1-17-1484647451-jpg-pagespeed-ce-t71qjlto4g-21-1490083658இதன்படி, சென்னையிலிருந்து வருகைத்தந்த UL 124 விமானமும், பெங்களூரில் இருந்து வருகைத்தந்த UL 172 விமானமும் மத்தள விமான நிலையத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று இரவு மின்சார தடை ஏற்பட்டிருந்ததுடன், பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.