வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இலங்கை வந்த கடற்படை பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக வேகத்தில் பயணித்த சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பன்னிப்பிட்டிய மஹல்வராவ சந்தியில் நேற்று அதிகாலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவ, பன்னிப்பிட்டிய, கட்டுகுருந்த பிரசேத்தை சேர்ந்த லுமால் மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகனத்தில் பயணித்த 5 பேர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வெளிநாட்டு கப்பலில் கடற்படை பொறியியலாளராக செயற்பட்டுள்ளார். அவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள நிலையில், நண்பர்களுடன் விருந்து ஒன்றுக்கு சென்று கொட்டாவ நோக்கி செல்லும் போதே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடையில் வந்த மோட்டார் சைக்கிளை காப்பாற்ற முயற்சித்த போது மரத்தில் வாகனம் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.