ஹற்றன் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சலங்கந்த ஹற்றன் மார்க்கத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சலங்கந்தையிலிருந்து ஹற்றன் நோக்கி வந்த பஸ் வண்டியே இன்று(30) காலை சலங்கந்த பகுதியில் விபத்துக்குள்ளானது.
திடீரென பஸ் வண்டியின் நிறுத்தல் தடை இயங்காத நிலையில் பாதையோர மண் மேட்டில் பஸ் மோதுண்டுள்ளது.
எனினும் குறித்த விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை எனவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.