கடும் மழை: போக்குவரத்து மற்றும் பயிர்ச்செய்கைகள் பாதிப்பு

மலையக பகுதிகளில் நிலவி வரும் மழையுடனான காலநிலையின் காரணமாக டயகம பிரதேசத்தில் 475 எல் டயகம பிரிவு கிராம சேவகர் காரியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்து அங்குள்ள ஆவணங்கள் சேதமாகியுள்ளதாகவும் குறித்த கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிக வெள்ளம் காரணமாக பயிர்ச்செய்கைகளும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக மலையக பகுதிகளில் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது, இதன்காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், டயகம பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மட்டுமின்றி நகர்ப்புற குடியிருப்புகளும், கடை தொகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)

அக்கரப்பத்தனை, தலவாக்கலை பிரதான வீதியில் மன்றாசி நகரத்திற்கு அண்மித்த பகுதியில் மூங்கில் தோப்பு சரிந்து வீழ்ந்ததில் அவ்வீதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளது.

மன்றாசி நகரில் இருந்து உட்லேண்ட் தோட்டத்திற்கு செல்லும் ஆகர ஆற்றை கடக்கும் பாலம் முற்றாக நீரினால் மூழ்கியுள்ளது, இதனால் இத்தோட்டத்திற்கு செல்லும் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (5)

டயகம பிரதேசத்தில் இருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றை அண்டிய பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

இதன்காரணமாக இப்பிரதேசங்களிலுள்ள விவசாய காணிகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.