இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை நேற்றிரவு பெரும் புயலாக மாறி பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பின் பல்வேறு பகுதியில் நேற்றிரவு வீசிய சூறாவளி காரணமாக பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இயல்பு வாழ்க்கை முற்றாக தடைப்பட்டிருந்திருந்தது.
நேற்றிரவு எட்டு மணி முதல் பெய்த அடைமழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வீதி போக்குவரத்து தடைப்பட்டது.
வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதுடன், சிலரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பின் பல பகுதிகளில் நேற்றிரவு தடைப்பட்டிருந்த மின்சாரம் தற்போது வழமை நிலைக்கு வந்துள்ளது.
எனினும் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.