யாழ்ப்பாணத்திற்கு இன்னும் 5 வருடங்களில் காத்திருக்கும் ஆபத்து??

இன்னும் ஐந்து வருடங்களில் யாழ்ப்பாணத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

625.250.560.350.160.300.053.800.450.160.90நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் முஸ்லிம் சமூகம் குடிநீருக்கு அல்லுருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் நகர அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையின் மக்கள் நிலத்தடி நீரை பெற்று கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.