RK நகர் தொகுதில் களம் இறங்கியுள்ள திமுக, அதிமுக மற்றும் தினகரனின் வெற்றி வாய்ப்பை பற்றி இதில் பார்க்கலாம் வாங்க..
ஜெயலலிதா இல்லாத அதிமுகவை எதிர்த்து, தேர்தல் களத்தில் முதல்முறையாக திமுக களம் இறங்குவதால், கண்டிப்பாக இதில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.
இந்த இடைத்தேர்தலில் சொதப்பினால், அடுத்து வரும் தேர்தல்களில் அது கண்டிப்பாக பாதிக்கும் என்பதை திமுக தலைமை அறியாமல் இல்லை.
அது ஒரு பக்கம் இருக்க, ஜெயலலிதா இல்லாத அதிமுகவை கூட ஜெயிக்க முடியவில்லை என்ற பெயர் ஸ்டாலினுக்கு கிடைத்து விடும்.
இதனால் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று திமுக தனது முழு பலத்தையும் RK நகரில் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதிமுக என் பின்னால்தான் உள்ளது என்று கூறி வரும் தினகரனும் சுயேச்சையாக களம் இறங்குகிறார்.
இதில் வெற்றி பெறவில்லை என்றால், இனிமேல் தனக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை தினகரன் அறிந்துள்ளார்.
தன்னுடைய பண பலத்தை நம்பி களம் இறங்கும் தினகரனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கட்டாயத்தில் உள்ளார்.
அதிமுக சார்பில் களம் இறங்கும் மதுசூதனன் மூத்த அரசியல் தலைவர். அவரின் அனுபவம் ஒரு வகையில் இந்த தேர்தலில் கைகொடுக்க வாய்ப்புள்ளது.
அது மட்டும் இல்லாமல், ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவை மதுசூதனனுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது இதில் கவனிக்கவேண்டிய விசயம்.
எடப்பாடி,ஓபிஎஸ் என்று ஒரு பெரும் பட்டாளமே தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்ய போகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால்., ஆட்சியில் அது மேலும் சிக்கலை உருவாக்கும் என்பதால் ஆளும் கட்சியும் தன்னுடைய முழு பலத்தை தேர்தலில் காட்டும்.
மற்றோரு பக்கம், திமுகவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த ஆதரவு இருப்பதால்.., போட்டி கடுமையாக இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும்.., மக்களின் மன நிலையை தற்போது வரை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை..