கொஞ்சம் கூட வெட்கப்படாம குத்தாட்டம் போட்ட ஜூலி – வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.

30-1512048174-julie3ஜூலிக்கு எழுந்த பத்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார். இப்போது ஜூலி செமையாக கலக்கி வருகிறார்.

மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வரும் சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலி தற்போது, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார்.

நல்ல பெயர் எடுக்க நீண்ட நாள் ஆகும் எனக் கூறப்படுவதை போல, ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரைக் குறை கூறி வருகின்றனர். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டர், ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை விமர்சித்து கொண்டே இருப்பது சரியானது அல்ல. ஒருவரை கடுமையாக விமர்சித்து திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடுவராக இருக்கும் கோகுல், ஒரு குழந்தைக்கு ஜூலியை ஆடிக் காட்டுமாறு கூறினார். பாடல் ஒலித்த உடனேயே, ஜூலி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார்.

ஜூலி சிறப்பாக ஆடியதைப் பார்த்த கோகுல், ‘ஜூலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஆடச் சொன்னதும், வெட்கப்படாமல் உடனே ஆடியதே’ எனப் பாராட்டினார். ஜூலியும் மகிழ்ச்சியாக அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.