மனைவியை படுகொலை செய்த கணவன்: பிரித்தானியாவில் வசிக்கும் பெண்ணுக்கு நடந்த துயரம்!

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் தன் மனைவியின் முகத்தில் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்தவர் Nirankar, இவரது மனைவி Kulwant Kaur, தனது மகன் மற்றும் மகளுடன் பிரித்தானியாவில் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்த நிலையில் தன்னுடைய கணவருடன் மருத்துவமனை செல்வதற்காக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கணவரிடம் அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டு, தன்னுடன் பிரித்தானியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90  மனைவியை படுகொலை செய்த கணவன்: பிரித்தானியாவில் வசிக்கும் பெண்ணுக்கு நடந்த துயரம் 625

ஏற்கனவே இந்த விடயத்தில் இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் ஆத்திரமுற்ற Nirankar, தான் வைத்திருந்த துப்பாக்கியினால் Kulwant Kaur-யின் முகத்திலேயே ஆறு முறை சுட்டுள்ளார்.

இதில் சம்பவஇடத்திலேயே Kulwant Kaur இறந்துவிட, பொலிசார் அவரது கணவரை கைது செய்தனர்.

இதுகுறித்து பிரித்தானியாவில் இருக்கும் அவர்களது பிள்ளைகள் கூறுகையில், ‘எங்களின் பெற்றோர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

ஒருபோதும் எங்களது தாயிடம் தந்தை பாசமாக நடந்து கொண்டதில்லை, அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மொஹாலியில் உள்ள பொலிசாருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

இதனை சாட்சியாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி Nirmal Singh தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்