பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி!

தலவாக்கலை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

201701281921410105_motorcycle-accident-75-age-woman-death-mecheri_SECVPFஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பூண்டுலோயா நவகாடுதொரவ பகுதியைசேர்ந்த 36 வயதுடைய புத்திக சாமர ஹெட்டியாரச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இன்று காலை 9.30. மணியளவில்  தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ற இ.போ.ச பஸ்வண்டியுடன் பூண்டுலோயாவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் வட்டகொடை தேயிலை தொழிற்சாலைக்கருகில் மோதுண்டுள்ளது.

சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.