அனர்த்தத்திற்குள்ளான குடும்பம் ஒன்றுக்கு 10,000 ரூபா வழங்கத் தீர்மானம் !

நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, துரிதமாக நிவாரணத்தை வழங்க தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

mythiribalaதென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இடர் முகாமைத்துவ அமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் அவர்களை மீட்டு எடுக்கும் பணியில் முப்படையினரை ஈடுபடுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலையினால் அனர்த்த நிலையை எதிர்கொண்டு, கடலில் மீனவர் உள்ளிட்டோர் இருப்போராயின் அவர்களை விரைவாக மீட்டெடுக்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

திடீர் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பம் ஒன்றுக்கு 10,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

இதே வேளை நிவாரண பணிகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று, பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் பங்களிப்புடன் இன்று மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.