இலங்கையில் பாரிய சூறாவளி! திணைக்களம் எச்சரிக்கை!

அடுத்த வாரம் பாரிய சூறாவளி தாக்கத்திற்கு இலங்கை முகங்கொடுக்கவுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வாரம் சூறாவளியில் இருந்து மீண்டு வந்த இலங்கை அடுத்த வாரம் பாரிய சூறாவளி ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

nadaபுதிதாக உருவாகும் அழுத்தம் மற்றும் இரண்டாவது வெப்பமண்டல அச்சுறுத்தல் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்படவுள்ளது.

இதன் காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நேற்று இலங்கை முழுவதும் அடை மழை பெய்ததோடு பலத்த காற்று வீசியமையால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்த வாரம் இலங்கை, தென்னிந்தியா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் தெற்கு கேரளா ஆகிய பகுதிகளில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் போது பாரிய வெள்ள ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.